இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரதான உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மேஜர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (3) மொத்தமாக ஆறு போட்டிகள் நிறைவடைந்திருந்தன.
இன்று நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவுகளை நோக்கும் போது பிரல்ய உள்ளூர் அணிகளில் ஒன்றான SSC மற்றும் திசர பெரேரா தலைமையிலான இலங்கை இராணுவப்படை அணி ஆகிய இரண்டும் இலகு வெற்றிகளைப் பதிவு செய்திருந்தன.
>> IPL 2021 – அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன?
அதேநேரம் இன்றைய நாளுக்கான துடுப்பாட்டத்தினை நோக்கும் போது இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரர்களில் ஒருவரான மிலிந்த சிறிவர்தன பதுரெலிய கிரிக்கெட் கழகத்திற்காக தான் விளையாடிய போட்டியில் அபார சதம் ஒன்றினை (112) விளாசியிருந்தார். மறுமுனையில், SSC அணிக்காக விளையாடிய இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான தனுஷ்க குணத்திலக்க அரைச்சதம் (51) பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் பந்துவீச்சினை நோக்கும் போது BRC அணியின் வலதுகை சுழல்பந்துவீச்சாளரான உமேஷ்கா மொரைஸ், ப்ளூம்பீல்ட் அணிக்கு எதிராக அபாரமாக செயற்பட்டு 46 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, பொலிஸ் அணியின் சஜித்ர சேரசிங்க 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டிகளின் சுருக்கம்
செபஸ்டியனைட்ஸ் கி.க. எதிர் குருநாகல் இளையோர் கி.க.
- டி சொய்ஸா சர்வதேச மைதானம், மொரட்டுவ
செபஸ்டியனைட்ஸ் கி.க. – 221 (49.5) மனேல்கர் டி சில்வா 54, நவீன் குணவர்தன 3/38, ரண்தீர ரணசிங்க 3/47
குருநாகல் இளையோர் கி.க. – 222/5 (42.2) கேஷான் வன்னியாரச்சி 64, துலாஜ் ரணதுங்க 39, ரவீன் பெரேரா 2/35
முடிவு – குருநாகல் இளையோர் கி.க. 5 விக்கெட்டுக்களால் வெற்றி
சோனகர் வி.க. எதிர் பொலிஸ் வி.க.
- பொலிஸ் பார்க் மைதானம், கொழும்பு
சோனகர் வி.க. – 262 (49.1) மஹேல உடவத்த 89, மலித் டி சில்வா 2/41
பொலிஸ் வி.க. – 100 (28.1) அசெல் சிகர 31, சசித்ர சேரசிங்க 5/24
முடிவு – சோனகர் வி.க. 162 ஓட்டங்களால் வெற்றி
பதுரெலிய கி.க. எதிர் கண்டி சுங்க வி.க.
பதுரெலிய கி.க. – 353/5 (46.2) மிலிந்த சிறிவர்தன 112, நிமன்த மதுஷங்க 80, உமேகா சத்துரங்க 4/54
கண்டி சுங்க வி.க. – 167 (45) ஹசித்த நிமால் 39, அசன்க சில்வா 2/16
முடிவு – பதுரெலிய கி.க. 91 ஓட்டங்களால் வெற்றி
SSC எதிர் செரசன்ஸ் வி.க.
- SSC மைதானம், கொழும்பு
SSC – 232 (49.1) லக்ஷித மனசிங்க 53, தனுஷ்க குணத்திலக்க 51, ஹஷேன் ராமநாயக்க 3/42, உதித் மதுஷான் 3/37
செரசன்ஸ் வி.க. – 183/7 (50) நவிந்து விதானகே 50*, ப்ரபாத் மனசிங்க 2/36
முடிவு – SSC அணி 49 ஓட்டங்களால் வெற்றி
BRC எதிர் ப்ளூம்பீல்ட் கி.க.
- ப்ளூம்பீல்ட் மைதானம், கொழும்பு
BRC – 353/5 (50) துஷான் ஹேமன்த 100*, லியோ பிரான்சிஸ்கோ 82, அனுக் பெர்னாந்து 64*, டிலும் பெர்னாந்து 2/76
ப்ளூம்பீல்ட் கி.க. – 163 (29.4) கசுன் ஏக்கநாயக்க 49, உமேஷ்க மொரைஸ் 7/46
முடிவு – BRC அணி 190 ஓட்டங்களால் வெற்றி
விமானப்படை வி.க. எதிர் இராணுவப்படை வி.க.
- இராணுவப்படை மைதானம், பாணகொட
விமானப்படை வி.க. – 110 (32) அசின்த மல்ஷான் 26*, மகேஷ் தீக்ஷன 4/40, சீக்குகே பிரசன்ன 3/11, துஷான் விமுக்தி 3/19
இராணுவப்படை வி.க. – 114/2 (13.4) அஷான் ரன்திக்க 54*
முடிவு – இராணுவப்படை வி.க. 8 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<