இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 1வது டி20 போட்டியில் இலங்கை அணி மிக அபாரமாக விளையாடிபுதுமுக வீரர்களான கசுன் ரஜித்த மற்றும் தசுன் சானக ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சின் மூலம் 12 பந்துகள்மீதமிருக்க 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
மைதான சூழ்நிலையை கருத்திற்கொண்டு நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தினேஷ்சந்திமல் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
போட்டியின் சுருக்கம்
இந்தியா அணி 101/10 (18.5)
அஷ்வின் 31*
ரைனா 20
யுவராஜ் சிங் 10
கசுன் ரஜித்த 29/(4)
தசுன் சானக 16/3 (3)
துஸ்மந்த சமீர 14/2 (3.5)
இலங்கை அணி 105/5 (18)
சந்திமல் 35
கபுகெதற 25
சிறிவர்தன 21*
அஷ்வின் 13/2 (3)
தனது முதல் போட்டியில் விளையாடிய அறிமுக வீரர் கசுன் ரஜித்த மிக சிறப்பாக பந்து வீசி ஆரம்ப 3 விக்கட்டுகளையும்கைபற்றினார். இதன் மூலம் இவர் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார்.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ரஞ்சி மைதானத்தில்நடைபெறவுள்ளது.