களனிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் 2016 இன் சுபர் 8 சுற்றின் நான்காம் வாரத்தின் இரண்டாவது போட்டியில் சொலிட் விளையாட்டுக் கழகத்தை 4-0 என தோற்கடித்து, ரினௌன் விளையாட்டுக் கழகம் தொடர்ந்து தமது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

சொலிட் விளையாட்டுக் கழகம், சுப்பர் 8 சுற்றில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு சமநிலையான முடிவுடன், மூன்று வாரங்களின் இறுதியில் 4 புள்ளிகளுடன் காணப்பட்டது.

இரண்டாவது பாதி கோலினால் போட்டியை சமப்படுத்திய சொலிட் கழகம்

சொலிட் விளையாட்டுக் கழகம் சுபர் 8 சுற்றின் முதல் போட்டியில் 5-0 என கடற்படை அணியை வீழ்த்தியிருந்தாலும்….

பதிலுக்கு விளையாடிய ரினௌன் விளையாட்டுக் கழகம், ராணுவப் படையுடனான போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் அவ்வணியின் ஆசிக்குர் ரஹ்மான் விதிமுறைக்கு புறம்பான முறையில் விளையாடியதன் காரணமாக ரினௌன் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் முக்கியமான 3 புள்ளிகளுடன் அவ்வணி மொத்தமாக 6 புள்ளிகளைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று ஆரம்பமான போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் ரினௌன் விளையாட்டுக் கழகம் திறமையான முறையில் விளையாடி போட்டியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.  

ஆரம்ப நிமிடங்களில் மொஹமட் பஸாலுக்கு கிடைத்த வாய்ப்பினை அவர் சரியான முறையில் பயன்படுத்தத் தவறினார்.  

மோசமான பந்துப் பரிமாற்றத்தினால் ராணுவப்படையிடம் மீண்டும் தோல்வி கண்டது ரினௌன்

டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் சுப்பர் 8 சுற்றின் ரினௌன் அணியுடனான போட்டியில் முதல் பாதியில் பெற்ற 3 கோல்களின் உதவியுடன் ராணுவப்படை அணி வெற்றியைப் பெற்று….

அதன் பின்பு சுதாரித்து சற்று முன்னேற்றகரமான முறையில் சொலிட் கழகம் விளையாடத் தொடங்கியது.

பின்னரும் பஸாலுக்கு மிகவும் இலகுவான, அருமையான வாய்ப்பு கிடைக்கப்பெற்ற போதிலும், பந்தினை கோலுக்குள் அனுப்பாமல் வெளியே அடித்து ரினௌன் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

ரினௌன் அணி பந்துப் பரிமாற்றம் மூலம் போட்டியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, சொலிட் அணி கவுண்டர் அட்டாக் மூலம் கோலடிக்க முயற்சித்தது.

போட்டியின் 31ஆவது நிமிடத்தில், சொலிட் அணியின் கோல் காப்பாளர் பாசில் ஆயுர்தீனின் தவறை லாவகமாகப் பயன்படுத்திய மொஹமட் முஜீப் போட்டியின் முதல் கோலை ரினௌன் அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, முதல் பாதியின் இறுதி நேரத்தில் ரினௌன் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அதனை அற்புதமாக உபயோகித்து மொஹமட் பஸால் கோலாக்கினார்.

முதல் பாதி: சொலிட் விளையாட்டுக் கழகம் 0 – 2 ரினௌன் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியை இரண்டு கோல்கள் பின்னிலையுடன் சந்தித்த சொலிட் கழகம், சிறப்பாக ஆரம்பத்தை வெளிக்காட்டியிருந்தது.  

அணியின் சார்பாக சஜீவன் மற்றும் அமித் குமார பந்தை கோலினுள் அனுப்ப முயற்சி செய்த போதிலும், அவை பலனளிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் சுமார் பதினைந்து நிமிடங்களை முற்று முழுதாக ஆக்கிரமித்து விளையாடியது சொலிட் கழகம். அணியின் தலைவர் எடிசன் பிகுராடோ சிறப்பாக தனது அணியினரை வழி நடாத்த, அவ்வணி ரினௌன் அணியின் பாதியை முற்றுகையிட்டது.

எனினும் அவர்களால் போட்டியில் தமக்கான முதல் கோலை போட முடியாமல் போனது.

இதனை பயன்படுத்திய ரினௌன் அணி கவுண்டர் அட்டாக் மூலம் பந்தை முன்னெடுத்துச் செல்ல, அணியின் தலைவர் மொஹமட் ரிப்னாஸ் 61ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலை போட்டார்.

அதனைத் தொடர்ந்து 75ஆவது நிமிடத்தில் ரினௌன் அணிக்காக பஸால் அனுப்பிய பந்தை லாவகமாகக் கையாண்ட ஜொப் மைக்கெல் ரினௌன் அணிக்கான நான்காவது கோலினை பெற்றுக் கொடுத்தார்.

இரண்டாவது பாதியின் இறுதி நேரங்களை ரினௌன் அணி ஆக்கிரமிக்க, சொலிட் அணி பந்தைக் கைப்பற்ற தவித்தனர். ஐந்தாவது கோலிற்கான வாய்ப்பு கிடைக்கப் பெற்றாலும் அவர்களால் அதனை அடிக்க முடியவில்லை.

இறுதியில் போட்டியை 4 – 0 என்ற கோல்கள் கணக்கில் ரினௌன் அணி வெற்றி கொண்டது.

முழு நேரம்: சொலிட் விளையாட்டுக் கழகம் 0 – 4 ரினௌன் விளையாட்டுக் கழகம்

ThePapare.com ஆட்ட நாயகன்மொஹமட் முஜீப் (ரினௌன் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

ரினௌன் விளையாட்டுக் கழகம் மொஹமட் முஜீப் 31′, மொஹமட் பஸால் (P) 45′, மொஹமட் ரிப்னாஸ் 61’, ஜொப் மைக்கெல் 75’